அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் யாழிற்கு விஜயம்



யாழ் லக்சன்-
யாழ் வடமராட்சி முள்ளியில் ஜப்பான் ஜெய்க்கா நிறுவனத்தின் சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நிதியுதவியின் ஊடாக அமைக்கப்பட்ட சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை இன்றையதினம் 27.6.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிஐிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஐாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக குறித்த நிலையத்தையும் திறந்து வைக்கவுள்ளார்

மாலை 3 மணிக்கு பலாலி வடக்கு அ.த.க. பாடசாலையில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தையும் திறந்துவைக்கவுள்ளதுடன் பின்னர் தெல்லிப்பழை தையிட்டியில் நீர் விநியோக திட்டத்தை திறந்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து மாலை 4 மணிக்கு யாழ் மத்திய கல்லூரிக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் பின்பு மாலை 4.25 மணியளவில் யாழ்.நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்துக்கும் விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :