கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கான விஷேட பூசை வழிபாடு



பைஷல் இஸ்மாயில் -
கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கான விஷேட பூசை நிகழ்வுகள் நாட்டின் 8 திசைகளிலும் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்ட சேருவாவில ரஜமஹா விகாரையில் நேற்று (05) மாலை இடம்பெற்றது.

சேருவாவில ரஜமஹா விகராதிபதி அளுதெனிய சுவோதி நாயக்க தேரர் தலைமையில் இடம்பெற்ற இந்த விஷேட பூசை வழிபாடுகளில் சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சிறிர ஜெயக்கொடி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகொரல, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி இ.ஸ்ரீதர், கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ.நபீல், கிழக்கு மாகாண பாரம்பரிய வைத்தியர்கள் சம்மேளத்தின் செயலாளர் டொக்டர் ஏ.சி.டில்சாத், டொக்டர் ரீ.டி.தனுஜா றுக்மாலி, சுதேச மருத்துவ திணைக்கள நிருவாக உத்தியோகத்தர் திருமதி எஸ்.நவேந்திர ராஜா, பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி சி.ஆர்.நிர்மலநாதன் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்த விஷேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


இந்த விஷேட பூசை வழிபாடுகளை சேருவாவில ரஜமஹா விகராதிபதி அளுதெனிய சுவோதி நாயக்க தேரர் மற்றும் ரஜமஹா விகாரவாசி கொஸ்கம புண்ணிய தேரர் ஆகியோர் நடாத்தி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :