சாணக்கியனின் கோரிக்கைக்கு பலன் கிடைத்தது – திக்கோடை வைத்திசாலையில் சிகிச்சை



ட்டக்களப்பு - திக்கோடை வைத்தியசாலையில் விரைவில் சிகிச்சை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - திக்கோடை வைத்தியசாலை கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படாமை குறித்து சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடந்த 24.02.2021 நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்விபதிலின் போது கொண்டு சென்றிருந்தார்.

அத்துடன், குறித்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையிலேயே திக்கோடை வைத்தியசாலையில் விரைவில் சிகிச்சை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளரினால், சுகாதார அமைச்சருக்கு கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அமைச்சருக்கு இரா. சாணக்கியன் அவர்கள் தன் கோரிக்கையை நடைமுறைப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.

மட்டக்களப்பு – திக்கோடை பகுதி மக்கள் எதிர்நோக்கி வந்த அசௌகரியம், இரா.சாணக்கியனின் முயற்சியினால் முடிவிற்கு வந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :