உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் எளிமையான மரநடுகை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இவ்வருடத்திற்கான உலக சுற்றாடல் தினத்தில் "எமது சுற்றாடல் கட்டமைப்பை பாதுகாப்போம்"எனும் தொனிப்பொருளிலான உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று (05) கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மிக எளிமையாக மரநடுகை மற்றும் விழிப்புனர்வு நிகழ்வு கெரோனா பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுகாதார வழிமுறைகளைப் பேணி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் தலைமையில் வைத்தியசாலையில் இடம் பெற்றது.
இங்கு பிரதம அதிதியாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம்.றிஸ்மி அவர்கள் கலந்து கொண்டதுடன் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment