யுஏபிஏ சட்ட திருத்தங்களுக்கு எதிராக திமுக குரல் கொடுக்க வேண்டும். யுஏபிஏ மற்றும் அடக்குமுறை சட்டங்கள் எதிர்ப்பு கூட்டியக்கம் வலியுறுத்தல் !



சென்னை : யுஏபிஏ மற்றும் அடக்குமுறை சட்டங்கள் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பாக " Against the Very Idea of Justice : UAPA and Other Laws " என்ற நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி, 14 மாநிலங்களில் இணையதள வாயிலாக கடந்த 29 மே 2021 அன்று நடைபெற்றது . அகில இந்திய அளவில் 40 க்கும் மேற்பட்ட செயல்பாட்டாளர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள் .
தமிழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கூட்டியக்கத்தின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் , பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சு.ப. உதயகுமார் , கூட்டியக்கத்தின் மத்தியக்குழு உறுப்பினரும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் முஹம்மது யூசுப் , இளந்தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள் .
இது குறித்து கூட்டியக்கத்தின் தலைவர் பேராசிரியர் மார்க்ஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஹாலித் முஹம்மது ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்தியில் ஆளும் பாஜக அரசு அரசியலமைப்பு சாசன சட்டம் வழங்கிய உரிமைகள் அனைத்தையும் வேறொரு சட்டத்தின் மூலம் பறிக்கக்கூடிய வேலையை தொடர்ச்சியாக செய்து வருகின்றது. குறிப்பாக மத்திய அரசை விமர்சிக்கக் கூடியவர்களை ஒடுக்குவதற்காக யுஏபிஏ போன்ற அடக்குமுறைச் சட்டங்களின் மூலம் கைது செய்வது , தேசத்துரோக குற்றம்சாட்டி சிறையில் அடைப்பது போன்ற மோசமான நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டு வருகின்றது . மேலும் யுஏபிஏ சட்டம் 2008, 2012, 2019 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டு ஒட்டு மொத்த மனித உரிமைகளையும் குழிதோண்டிப் புதைக்கக் கூடிய மோசமான கருப்புச் சட்டமாக இன்று செயல்படுத்தப்படுகின்றது .
எனவே இந்த அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக கூட்டியக்கம் சார்பில் தொடர் மக்கள் பரப்புரையை தமிழகம் முழுவதும் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் 2014 ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 2012 ஆம் ஆண்டு யுஏபிஏ சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை வாபஸ் பெறுவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று வாக்குறுதியாக கொடுக்கப்பட்டது. அந்த வாக்குறுதியின் அடிப்படையில் யுஏபிஏ சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை திரும்பப் பெற நாடாளுமன்றத்தில் திமுக சார்பாக குரல் எழுப்ப வேண்டும் என தமிழக முதல்வரும் , திமுக தலைவருமான திரு மு.க.ஸ்டாலின் அவர்களை இந்த கூட்டியக்கம் கேட்டுக்கொள்கின்றது என தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :