வாடகை அறவீடுகளில் விலைக்கழிவு வழங்க முன்வருமாறு எஸ்.எம்.சபீஸ் வேண்டுகோள்.



நூருள் ஹுதா உமர்-
ர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்கிய உரிமையாளர்கள் நாட்டின் தற்போதைய கொரோனா சூழ்நிலை கருதி விலைச் சலுகைகளை வழங்க முன்வர வேண்டுமென அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது. உலகையே முடக்கி வைத்துள்ள கொரோனாவால் சகல இயல்பு நிலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்புக்கள் ஏழை பணக்காரன் தொழிலாளி முதலாளி என அனைவரது பொருளாதாரத்தையும் வீழ்த்தியுள்ளது. வசதிபடைத்தோரால் இந்நிலைமையை எதிர்கொள்ள முடிந்தாலும் தொழிலாளர்கள் இதை எதிர்கொள்வதில் பெரும் சிரமங்களை அனுபவிப்பதையும் எம்மால் காண முடிகின்றது.

இந்நிலையில் வர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்கிய கட்டிட உரிமையாளர்கள் விலைக்கழிவுகள் அல்லது சலுகைகள் அடிப்படையில் வாடகைகளைப் பெற முன்வரவேண்டும் எனவும் அதன்மூலம் சமூகத்தில் தம்மால் முடியுமான உதவிகளை செய்தவர்களாக மாறிவிடுவோம் எனவும் எஸ்.எம்.சபீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :