செங்கலடி கறுத்தப்பாலத்தில் இராணுவ ட்ரக் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் இராணுவ வீரர்கள் இரண்டுபேர் உயிரிழந்துள்ளனர்



ஏறாவூர் நிருபர் நாஸர்-
ட்டக்களப்பு - செங்கலடி கறுத்தப்பாலத்தில் இராணுவ ட்ரக் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் இராணுவ வீரர்கள் இரண்டுபேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று 25.06.2021 மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாகரை முகாம் இராணுவத்தினர் இலுப்படிச்சேனை பிரதேசத்திற்குச் சென்று திரும்பும் வழியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

வேகமாக வந்த ட்ரக்வண்டி பாலத்தின் ஒரு பகுதியினை உடைத்துக்கொண்டு சேற்றில் விழுந்துள்ளது. இதனால் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.

பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பெரும் பிரயத்தனத்துடன் இராணுவ வீரர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சம்பவ இடத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கூடிநின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :