மணிநேரத்தில் 62 000 வாகனங்கள் கொழும்புக்குள் பிரவேசம்!!!



M.I.M.இர்ஷாத்-
மூன்று மணித்தியாலத்தில் கொழும்புக்குள் 62 000க்கும் அதிகமான வாகனங்கள் வருகைத்தந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு கொழும்புக்குள் வருகைத்தரும் வாகனங்கள் அனைத்தும் அத்தியாவசிய சேவை பணியாளர்களை அழைத்து செல்லும் வாகனங்களா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் 3,969 வாகனங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதுடன் , அவற்றில் பயணித்த 4,191 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய 3 மணிநேரத்திற்குள் 62 ஆயிரத்து 235 வாகனங்கள் கொழும்புக்குள் வருகைதந்துள்ளன.

கொழும்புக்குள் வருகைத்தரும் வாகனங்களை கணக்கீடு செய்வது மட்டுமன்றி , அந்த வாகனங்களில் வருகைத்தருபவர்கள் பணிக்காக அழைக்கப்பட்டுள்ளனரா? , அவர்கள் அத்தியாவசிய சேவை பணியாளர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.

இந்த சுற்றிவளைப்புக்காக ஆறு பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் , இதன்போது பொலிஸார் ஏறி, பின்தொடர்ந்து அதனை உறுதிப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன்போது தொழிலுக்கு செல்பவர்கள் தங்களது நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தை பொலிஸாருக்கு காண்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :