நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 5342 கொரோனா தொற்றாளர்கள்தலவாக்கலை பி.கேதீஸ்-
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 5342 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.78 பேர் உயிரிழந்துள்ளனர். 24 மணி நேரத்தில் 113 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தின் கொரேனா தொற்று தொடர்பாக 9.6.2021 மாலை வெளியான அறிக்கையின்படி 5342 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் 78 பேர் மரணமடைந்துள்ளனர். 3915 குடும்பங்கள் தன்மைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 09.06.2021 வரையான 24 மணித்தியாலயத்தில் 113 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் 48 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அம்பகமுவ பகுதியில் 1073 குடும்பங்களும் கொத்மலை பகுதியில் 897 குடும்பங்களும் ஹங்குரன்கெத்த பகுதியில் 216 குடும்பங்களும் வலப்பனை பகுதியில் 918 குடும்பங்களும் நுவரெலியாவில் 811 குடும்பங்களுமாக மொத்தமாக 3915 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரேனா தொற்று உறுதியானவர்களில் அதிகமானவர்கள் அம்பகமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் அம்பேகமுவ பகுதியில் 982 பேரும் பொகவந்தலாவ பகுதியில் 665 பேரும் ஹங்குரன்கெத்த பகுதியில் 383 பேரும் கொட்டகலை பகுதியில் 309 பேரும் கொத்மலையில் 458 பேரும் லிந்துலையில் 337 பேரும் மஸ்கெலியா 255 பேரும் மதுரட்ட பகுதியில் 122 பேரும் நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்டவர்களில் 365 பேரும் புதிய திஸ்பனை பகுதியில் 388 பேரும் நுவரெலியாவில் 452 பேரும் இராகலையில் 327 பேரும் வலப்பனை பகுதியில் 299 பேருமாக மொத்தமாக 5342 பேர் பி.சி.ஆர் பரிசோதனையின் மூலமாக தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்கள் அதிகம் இனம் காணப்பட்ட பிரதேசமாக அம்பகமுவ பிரதேசம் காணப்படுகின்றது. இங்கு 982 பேர் இனம் காணப்பட்டுள்ளதுடன். இதுவரையில் நுவரெலியா மாவட்டத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளதுடன். அதில் அதிகமானவர்கள் நுவரெலியா பகுதியிலேயே உயிரிழந்துள்ளனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர அம்பகமுவ பகுதியில் 27 பேரும் வலப்பனை பகுதியில் 11 பேரும் கொத்மலையில் 6 பேரும் ஹங்குரன்கெத்த பகுதியில் 2 பேருமாக 78 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் அதாவது இந்த அறிக்கை வெளியான (09.06.2021) அன்று மாலை 4 மணி வரை நுவரெலியா பகுதியிலேயே அதிகமான தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 46 பேர் இனம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :