உலகளவில் 17.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு




கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது.

வாஷிங்டன், கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் தணியவில்லை. எனினும், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உலகளவில் 17.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 37.35 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 15.65 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் புதிதாக 10,950 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 380 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மொத்தம் 3.42 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6.12.195 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் ஒரே நாளில் 65,471 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,683 பேர் தொற்றால் உயிரிழந்தனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 1.69 கோடி பேர். மொத்த பலி எண்ணிக்கை 4.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :