இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.லகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் வேகமாக நடைபெறுகிறது.

ஆனால், பெரும்பாலான நாடுகளில் குழந்தைகள் மற்றும் சிறுவர்\சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுடைய சிறுவர்\சிறுமியரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஐரோப்பிய ஒன்றியமும் 12 முதல் 15 வயதுடையோர் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதித்துள்ளது.

ஆனால், பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கே தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் 12 வயது முதல் 15 வயது நிரம்பிய சிறுவர்\சிறுமியருக்கும் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர்\சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் இந்த பணிகள் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகவில்லை.
12 வயது முதல் 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :