பாஜக வை சார்ந்த ஹெஜ்.ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!சென்னை : பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா குறித்து அவதூறாக பேசிய பாஜக வை சார்ந்த ஹெஜ்.ராஜா உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது

இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவின் மூத்த தலைவர் ஹெஜ்.ராஜா சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெய்லர் ஜெயபிரகாஷை கொலை செய்தது இன்றைய பாபநாசம் எம்.எல்.ஏ என்றும், ஜெயிலரின் மகன் தான் இன்று பிரபல சினிமா நட்சத்திரம் சிவகார்த்திகேயன் என்றும் அவதூறான கருத்தை தெரிவித்துள்ளார்.

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும், தமுமுக தலைவருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா மீதான தனது வன்மத்தை தீர்த்துக்கொள்ள அவர் மீது பொய்யாக கொலைப்பழி சுமத்தியுள்ளார். இந்த மோசமான அவதூறுக்கு எதிராக தமுமுக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை அறிய முடிகிறது. அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மத கலவரம் ஏற்பட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் ஹெஜ்.ராஜா பல ஆண்டுகளாகவே இது போன்று தொடர்ந்து ஆணவத்துடன் பேசி வருகிறார். கடந்த காலங்களில் நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். ஆனாலும் மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை பேட்டி என்கிற பெயரில் தெரிவித்து வருகிறார்.

எனவே, சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்ற பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த ஹெஜ்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :