அட்டாளைச்சேனை அல் இபாதா கலாச்சார மன்றத்தின் பயான் நிகழ்வு நிறைவும் பரிசளிப்பு நிகழ்வுகள்!



றிஸான் றாசீக்-

கிழக்கு மாகாண முன்னால் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் எண்ணத்தில் உருவான அல் இபாதா கலாச்சார மன்றத்தின் பயான் நிகழ்வு கடந்த பத்து வருடங்களாக புனித ரமழான் மாதத்தில் பிரசித்திபெற்ற மார்க்க அறிஞர்களை கொண்டு ஹதீஸ் மஜ்லிஸ் பயான் நிகழ்வுகள் நடைபெற்றது.

இவ்வருடம் நாட்டுல் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் சுகாதார விதிமுறைகளை பேணி அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி முன்றலில் இடம்பெற்றது. ரமழான் 5ல் ஆரம்பமான ஹதீஸ் மஜ்லிஸ் பயான் நிகழ்வுகள் இன்று (6.05.2021) நிறைவடைந்தது.

இவ்வருடம் இடம்பெற்ற ஹதீஸ் மஜ்லிஸ் பயான் நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில்களை வழங்கியவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய இறுதி நிகழ்வில் பிரதம அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் செயலாளர் ஜனாப் எம்.ஏ.சி.சாபீர் அவர்களும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் கௌரவ ஏ.அமானுல்லா அவர்களும்,
அல்இபாதா கலாசார மன்றத்தின் ஹதிஸ் குழு தலைவர் மௌலவி எம்.ஐ. சப்ரி, அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளரும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய மௌலவி அல்ஹாஜ் யு.எம் நியாசி, அல்-இபாதாவின் ஆலோசகரும் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் மௌலவி ஏ சி எம் சுபைர், ஆசிரிய ஆலோசகர் அல்-இபாதாவின் உபதலைவர் அல்ஹாஜ் மௌலவி என்.ரி. நசீர், அட்டாளைச்சேனை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் பி.ரி.எம். அபுல் ஹஸன், கலாசார உத்தியோகத்தர் எம். எஸ்.எம்.ஜவ்பர், கலாசார மன்றத்தின் செயலாளர் ஆசிரியர் ஜே.பஸ்மீர், பொருளாளர் ஆசிரியர் எம்.எஸ். எம்.பாஹிம் அல் இபாதா கலாச்சார மன்றத்தின் பிரச்சார செயலாளரும், அதிபருமான எம்.எஸ்.எம். பைறூஸ் மற்றும் ரமழான் நற் சிந்தனைகளை வழங்கிய உலமாக்கள், அல்-இபாதா கலாசார மன்றத்தின் நிர்வாக உத்தியோகத்தர்கள்,உறுப்பினர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :