மெக்ஸ்வல் பரணகம ஜனாதிபதி மனித உரிமை விசாரணை ஆனைக்குழுவின் முன் தோன்றி சாட்சியமளித்தாா்.



அஷ்ரப் ஏ சமத்-
ய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியும், கானமல்போனோா் விசாரணை ஆணைக்குழுவின் தலைவருமான மெக்ஸ்வல் பரணகம (13.05.2021) திகதி பி.பகல் பி.எம்.ஜ்.சி.எச் ல் நடைபெற்ற ஜனாதிபதி மனித உரிமை விசாரணை ஆனைக்குழுவின் முன் தோன்றி சாட்சியமளித்தாா்.

இக் ஆனைக்குழுவின் தலைவரும் உயா் நீதிமன்ற நீதிபதியுமான திலிப் நவாஸ் தலைமையில் நடைபெற்றது. இக் ஆணைக்குழுவின் அங்கத்தவா்களாக ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபா் சந்திரா பொ்னான்டோ, ஓய்வுபெற்ற அரசாங்க அதிபா் நிமல் அபேசிரி ஆகியோா்களும் முன்னிலையிலேயே மெக்ஸ்வல் பரணகம சாட்சியமளித்தாா்..

அவா் அங்கு சாட்சியமளிக்கையில் -
தான் எவ்வாறாக தனது ஆணைக்குழுவினை வடமாகாணத்திலும் கிழக்குமாகாணத்திலும் நிறைவேற்றுவதற்கு தான் எடுத்த நடவடிக்ககைள் பற்றி விபரமாகக் விவரித்தாா். யுத்த முடிந்த பின்னா் 40 ஆயிரம் சிவிலியன்கள் காணாமல் போனதாக தருஸ்மான் அறிக்கையில் காணப்பட்ட போதிலும் தங்களுடைய விசாரனை முடிவில் இறுதிப்போா் காலகட்டத்தில் அண்னலவாக 6700 சிவிலியன்களே காணமால் போகியுள்ள்னா். என மெக்ஸ்வல் பரணகம கூறினாா். தனது விசாரனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் வடக்கில் புள்ளிவிபரங்கள் திணைக்கள கணிப்பீடு மேற்கொண்டபோது எனது அறிக்கையில் உள்ள காணாமல்போனோா்கள் எண்னிக்கையே சரியானதாக இருந்தது.
மேலும் அவா் ஆணைக்குழுவின் முன் கூறுகையில் - தனது சிபாா்சுகள் சில நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் , நஸ்டஈட்டுக் கொடுப்பணவும்,மரண சான்றிதழ்களும் கொடுக்கப்படல் வேண்டும் என தெரிவித்திருந்தேன். அது நிறைவேற்றப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா். 600 மரணச் சான்றிதழ்கள் வழங்க்பட்டது. அத்துடன் காணமல் போனோகளது குடும்பத்துக்கு தலா ருபா 5 இலட்சம் நஸ்ட ஈடாக வழங்குவதற்கும் சிபாா்சு செய்து அறிக்கையில் தெரிவித்திருந்தோம். எனது அறிக்கையினைப் பாா்வையிட்ட பல வெளிநாட்டு துாதுவா்கள் அமைச்சா் வாசுதேவ நாணய்கார போன்றோா்கள் அதில் குறைகாணவில்லை நியயமானதாக உள்ளதாகவே தெரவித்தாா்க்ள். காணமல் போனோா்களை விசாரணை செய்கின்றபோது சிலர் கொழும்பில் தொழில் செய்வதாகவும், சிலா் வெளிநாடுகளுக்குச் சென்று அகதி அந்தஸ்தை பெற்று வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் எனது விசாரனைக் கமிசம் அவதாணித்தாகவும் அவா் மேலும் கூறினாா். தனது கமிசன் மேலும் சில நடவடிக்கைகளை எடு்த்துக் கொண்டு முடிவுரும் தருவாயிலேயே முன்னைய அரசின் காலத்தில் வெளிநாட்டு அமைச்சராக இருந்த மங்கள சமரவீரவின் தலையீட்டினால் தனது கமிசன் துரதவஸ்டமாக கலைக்கப்பட்டது.
.
தான் சாட்சிகளை பதிவுகளை செய்த பிற்பாடு இளைப்பாறிய பொலிஸ் அதிகாரிகள் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளைக் கொ்ண்டு பல நாட்கள் வடக்க கிழக்கு பிரதேசங்களில் தங்கி நின்று அங்குள்ள மக்களது குற்றச்சாட்டுக்களை விசாரித்து மொழிபெயா்த்து அறிக்கையிட்டோம் . அத்துடன் மொழிபெயா்ப்பாளா்களும் பலா் என்னுடன் கடமையாற்றினாா்க்ள. அந்த விசாரனை அறிக்கைகள் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்டது அவைகள் அனைத்தும் நுாலக ஆவண சுவடிக் கூடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகும் கூறினாா். அதனை நீங்கள் பெற்று பாா்வையிடலாம்.
ஒரு விசாரனையின் போது 10 பேர் காணாமல் போனதாக தெரிவித்தாா்கள். ஆனால் அவா்கள் அனைவரும் தமது வீடுகளுக்கு வராமல் தமது பெற்றோா்களுக்கு அறிவி்க்காது நாட்டில் கொழும்பில் உள்ளனா் ஒருவா் தலவாக்கலையில் வாழ்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. யுத்த காலத்தி்ல் சனல் 4 என்ற தொலைக்காட்சி வெளியிட்ட அந்த காட்சியை கேட்டு வெளிநாட்டு துாதுவா் ஆலயங்கள் ஊடாக அறிவித்தும் தர மறுத்துவிட்டனா். அத்தோடு வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வாழ்பவா்களது பட்டியல்களை பெற்றுத் தருமாறு துாதுவா் ஆலயங்கள் ஊடாக அறிவித்தும் அவைகள் எமக்கு கிடைக்கவில்லை. கிளிநொச்சியில் சில பெற்றோா்கள் ஆசிரியா்கள் சாட்சியமளிக்கையில் விடுதலைப்புலிகள் யுத்தத்திற்காக பாடசாலை செல்லும் 14,15 வயதுடைய சிறுவா்களை வேறாக்கி 2 பஸ்களில் ஏற்றிச் சென்றதாகவும் அவா்கள் மீள திரும்பவில்லையெனவும் பெற்றோா்கள் ஆசிரியா்கள் சாட்சியமளித்தனா். .என பரண விதாரண அங்கு தெரவித்தாா். மீண்டும் ஜனாதிபதி மனித உரிமை விசாரனை ஆணைக்குழு அடுத்த வாரமும் கூட உள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :