வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்கு வரலாற்றில் முதல் தடவையாக பக்தர்களின் பிரசன்னமின்றி இனிதே நடைபெற்று நிறைவுற்றிருக்கிறது.
இன்று (25) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4மணியளவில் திருக்குளிர்த்தி பாடும் சடங்கு ஆரம்பமாகி 5.30மணியளவில் நிறைவுற்றது.
அன்ரிஜன் சோதனை செய்யப்பட்ட 10 ஆலயநிருவாகிகளுடன் இச்சடங்கு அத்தனை நாட்களிலும் நடைபெற்று வந்தன. அவர்கள் வெளியில் வராமல் ஆலயத்தினுள் தங்கியிருந்தே இதனை மேற்கொண்டிருந்தனர்.
கடந்த எட்டு நாள் சடங்குகள் அனைத்தும் வானொலி மற்றும் முகநூல் காnzhளியினுடாக ஒலி ஒளி பரப்புச்செய்யப்பட்டு வந்தன.
அதேபோல் இன்றுஅதிகாலையிலும் இவ் ஒலிஒளிபரப்பு இடம்பெற்றது. அதனை உள்நாட்டிலும் புலம்பெயர்தேசத்திலுள்ள அம்மனடியார்கள் வீட்டிலிருந்தவாறே கண்டுகளித்ததுடன் வணங்கி வழிபட்டனர்.

0 comments :
Post a Comment