நாளை புயற்காற்று : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை



ங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியிலும் அதனையடுத்து நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் விரைவாக கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்குத் செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை புயலாக மாற்றமடையக்கூடுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு அந்தமான் கடல் பிரதேசம் மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்திலும் கடல் திடிரென கொந்தழிப்புடன் காணப்படுவதுடன் இடியுடன் கூடிய மழையும் பெய்யலாம். 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :