நடைமுறை சாத்தியமில்லை எனக்கூறி தப்பிவிடமுடியாது! ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் . ஹசன் அலி



வி.ரி.சகாதேவராஜா-
மிழ் பேசும் சமூகத்துக்கான தீர்வில், வடக்கு கிழக்கில் நிலத்தொடர்பற்ற அதிகார அலகினை உருவாக்குவதுடன் அம்பாறை மாவட்டத்தில் கரையோர தேர்தல் மாவட்டமும் கரையோர நிருவாக மாவட்டமும் உருவாக்கப்பட்டு தமிழ் பேசும் அரச அதிபர் நியமிக்கப்பட்டு தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறே தமிழ் பேசும் தலைவர்கள் பேசுவதற்கு சிறந்த காலம் இதுவே ஆகும்.

இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.ரி. . ஹசன் அலி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்:

நாட்டில் நல்லிணக்கம் உண்மையில் உருவாக்கப்பட வேண்டுமானால் நடந்தவற்றை பின்னோக்கி பார்த்து நியாயமான தீர்வுகளை தர வேண்டும். இது எல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று இலகுவாக சொல்லி தப்பி விட முடியாது.

நிலம் என்பது ஒரு சமுதாயத்தின் இருப்புஇறைமை சுய நிர்ணயம் அரசியல் அதிகாரம் வாழ்வாதாரம் நாகரிகம் பண்பாடு கலாசாரம் போன்ற பல விடயங்களோடு நேரடியாக சம்பந்தப்பட்டு உள்ளது. இதனால்தான் நில ஆக்கிரமிப்புகளை மற்றவர்களால் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் அண்ணல் நபிகள் வாளெடுத்து போராடி தடுத்தார்.

1952 ஆம் ஆண்டு டி. எஸ். சேனநாயக்க காலத்தில் அரச உதவியுடன் அம்பாறையிலும் திருகோணமலையிலும் அபிவிருத்தி திட்டங்கள் என்கிற பெயரில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றன. அம்பாறையில் கல்லோயா அபிவிருத்தி திட்டம் மூலமாகவும்இ திருகோணமலையில் அல்லை திட்டம் மூலமாகவும் இவை நடந்தேறின.
1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இருந்து இரண்டாக பிரித்து புதிய அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன்போது மொனராகலை பொலனறுவை பதுளை போன்ற மாவட்டங்களின் எல்லை கிராமங்களையும் சேர்த்து புதிய எல்லையை அம்பாறை மாவட்டத்துக்கு உருவாக்கி விட்டனர். இது மிக திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு நடவடிக்கையே ஆகும்.

நீண்ட பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த கல்முனையே உண்மையில் அம்பாறை மாவட்டத்தின் தலைநகரம் ஆக்கப்பட்டு இருக்க வேண்டும்.

1948 ஆம் ஆண்டு மேலதிக அரசாங்க அதிபர் அலுவலம் கல்முனையில் இயங்கி உள்ளதையும் ஏ. எம். ஏ. அஸீஸ் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றினார் என்பதையும் இங்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

ஆனால் அம்பாறைதான் அம்பாறை மாவட்டத்தின் தலைநகரம் ஆக்கப்பட்டது. கல்லோயா அபிவிருத்தி சபைக்கு சொந்தமான கட்டிடம்தான் அம்பாறை கச்சேரி ஆக்கப்பட்டது. கச்சேரி நிர்வாகம்கூட சிங்களத்திலேயே நடந்தது. இக்கச்சேரியின் வரலாற்றில் இது வரை தமிழ் பேசும் அரசாங்க அதிபர் நியமனம் பெறவே இல்லை.
அதே போல திருகோணமலை மாவட்டத்துக்கும் தமிழ் பேசும் அரசாங்க அதிபர் ஒருவர் நியமனம் பெற முடியாத நிலையே தொடர்கின்றது.

1987 ஆம் ஆண்டு புதிய உள்ளூராட்சி சட்டம் மூலம் புதிய உள்ளூராட்சி சபைகள் அதாவது பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. கிராம சபைகள் உள்ளூராட்சி சபைகளாக மாற்றப்பட்டபோது சரியான எல்லை நிர்ணய சபைகள் வைக்கப்பட்டோ மக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டோ எல்லை நிர்ணயம் இடம்பெறவில்லை.

அப்போது 5/6 பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்த ஜே. ஆர் அரசாங்கம் வடக்கு கிழக்கு யுத்த பிரதேசமாக இருந்ததால் கொழும்பில் இருந்தவாறே எல்லைகளை உருவாக்கியபோது இன பரம்பலுக்கு ஏற்ப சபைகள் அமைக்கப்படவில்லை. சிங்கள பிரதேசங்களுக்கு கூடுதல் நில பரப்புகளை கொடுத்து புதிய எல்லைகளை வகுத்தனர்.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்து விட்டபோதிலும் இவ்வாறெல்லாம் முறைகேடாக நடந்த மாற்றங்கள் கட்டாயம் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும். இன பரம்பல் இன விகிதாசாரம் ஆகியவற்றுக்கு ஏற்ப புதிய எல்லைகள் அமைக்கப்பட வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :