கொரோனா தாக்கத்தின் பிரதிபலிப்பு : பெருநாள் அன்று உறக்க நிலையில் அம்பாறை முஸ்லிம் பிரதேசங்கள் !நூருல் ஹுதா உமர்-
லங்கையில் இன்று புனித நோன்புப்பெருநாளை முஸ்லிங்கள் கொண்டாடிவரும் நிலையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்கள் அடங்கலாக அம்பாறை மாவட்டம் முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு, ஆள் நடமாற்றங்கள் இல்லாமல் விரைத்தோடிய நிலையில் சகல ஊர்களும் காணப்படுகிறது. கொரோனா அலையின் தாக்கம் காரணமாக அரசினால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து ஸ்தம்பிக்கப்பட்ட நிலையில் முஸ்லிங்கள் புனித நோன்புப்பெருநாளை இன்று கொண்டாடி வருகிறார்கள்.

பாதுகாப்பு படையினரும், பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், வீதியால் செல்பவர்கள் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் சுகாதார நடவடிக்கைகளையும் மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்க வலியுறுத்தி வருவதை காணக்கூடியதாக உள்ளத்துடன் பள்ளிவாசல்கள் அடங்களாக சகல மத அனுஷ்டான இடங்களும், கடற்கரை தங்குமிட பிரதேசங்கள், பூங்காக்கள், பூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :