"தனி தமிழ் தொகுதி, முஸ்லீம் தொகுதி என்ற அடிப்படையில் தேர்த்தல் முறை மாற்றம் தொடர்பான சவாலில் வெற்றிக்கொள்ள முடியாது.""தனி தமிழ் தொகுதி, முஸ்லீம் தொகுதி என்ற அடிப்படையில் தேர்த்தல் முறை மாற்றம் தொடர்பான சவாலில் வெற்றிக்கொள்ள முடியாது." என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார்.

இன்று நாட்டில் புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக கலந்துரையாடல்கள் ஆரம்பித்திருக்கிறது. முன்வரும் மாகாண சபை தேர்தலுக்கான முறைமையாக மட்டும் இதனை நோக்க முடியாது. மாகாண சபை தேர்தலுடன், இனி வரும் பொது தேர்தலுக்கான தேர்தல் முறையும் இதனுடன் தொடர்புபடுகின்றது. இத்தேர்தல் முறை மாற்றத்தில் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகம் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது. மறுபக்கம் பெரும்பாண்மை சமூகத்திலுள்ள நாட்டின் சிறு கட்சிகளும் அதே சவாலுக்கு உள்ளாகின்றது. எனினும் தனி தமிழ் தொகுதி, தனி முஸ்லீம் தொகுதி என்ற அடிப்படையில் தேர்த்தல் முறை மாற்றம் தொடர்பான சவாலில் வெற்றிக்கொள்ள முடியாது.

தேர்தல் முறைமை தொடர்பாக பேசுகின்ற போது, அடிப்படையில் மூன்று முறைகளை எடுத்துக்காட்டலாம். தொகுதிவாரியான முறை, விகிதாசார முறை, மற்றும் கலப்பு தேர்தல் முறை. இவற்றில் பல்லினங்கள் வாழுகின்ற நாடுகளில் அதுவும் செறிந்து அல்லாது பரந்து வாழுகின்ற போது விகிதாசார தேர்தல் முறையே அனைத்து சமூகங்களினதும் பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்தும். அத்தகைய ஜனநாயக விழுமியம் கொண்ட அனைத்து சமூகங்களுக்கும், அதே போன்று பல்வேறு மாற்று கருத்துக்கள் கொண்டவர்களுக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தும் விகிதாசார முறையே இன்று நடைமுறையில் உள்ளது. இதனுடைய மாற்றம் ஜனநாயக ரீதியான வெளிப்படுத்தல்களுக்கு தடையான ஒன்றாக அமைவதற்கு இடமளிக்க கூடாது.

நடந்து முடித்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் கலப்பு முறையில், தொகுதிவாரியாக 60%, விகிதாசார அடிப்படையில் 40% என்ற அடிப்படையில் நடைபெற்றது. இன்று மாகாண சபை தேர்தலுக்கு, அதே அடிப்படையில் 70% க்கு 30% என்பது முன்மொழியப்பட்டிருக்கின்றது. இதனை பல பெரும்பான்மை கட்சிகள் ஏற்றுக்கொண்டும் இருக்கின்றது. ஆனாலும் இத்தகைய ஒரு முறையிலே ஏற்படும் விளைவுகள் தொடர்பாக பெரும்பாண்மை காட்சிகள் இடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளது.

இச்சூழ்நிலையை நாம் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விகிதாசார தேர்தல் முறையை தக்கவைத்துக்கொள்வதற்கு கோட்பாட்டு ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி, தலைவர் மனோ கணேசனின் தலைமையில் விகிதாசார தேர்தலை, வளைய முறையில் (Zonal System) நடத்துவதற்குரிய முன்மொழிவுகளை செய்திருக்கின்றது. இம்முறை இன்று பலராலும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றது.

எனவே குறிகிய வட்டத்திற்குள் இருந்து, இன ரீதியான அடிப்படைகளை மையப்படுத்தி, எம்மை நாமே ஓரம்கட்டிக்கொள்ள கூடாது. மாறாக, முழு நாட்டினதும் நலனை அடிப்பாயாக கொண்டு, அதிலே தமிழ் பேசும் சமூகத்தினது அரசியல் பலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்கு பெரும்பான்மை சமூகம் சார்ந்த பெரிய கட்சிகள் போலவே சிறிய கட்சிகளையும் நாம் சரியான முறையில் அணுகவேண்டியுள்ளது. இந்நிலைமையை சரியான முறையில் உணர்ந்து தமிழ் முற்போக்கு கூட்டணி தனது நகர்வுகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்து வருகின்றது. இதனை புரிந்துகொண்டு குறுகிய வட்டத்தில் இருந்து விடுபட்டு, பரந்த அடிப்படையில் நோக்கி, புதிய தேர்தல் முறை தொடர்பாக முன்மொழிவுகளை செய்யவும் மற்றும் அபிப்பிராயங்களை தெரிவிக்கவும் அனைவரும் முன்வர வேண்டும்.

"தனி தமிழ் தொகுதி, முஸ்லீம் தொகுதி என்ற அடிப்படையில் தேர்த்தல் முறை மாற்றம் தொடர்பான சவாலில் வெற்றிக்கொள்ள முடியாது." என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :