கல்முனை விவகாரத்தில் சாணக்கியனின் பேச்சுக்கு மு.கா த‌லைவ‌ர் மௌனம் காத்து ச‌ம்ப‌ந்த‌னின் கூடாரத்தினுள் ஒழிந்திருக்கின்றார் : உலமா கட்சி குற்றசாட்டுநூருல் ஹுதா உமர்-
க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் த‌ர‌ம் குறைக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ சாண‌க்கிய‌ன் எம் பி பாராளும‌ன்ற‌த்தில் ப‌ச்சை பொய்யை சொல்லியுள்ளார். க‌ல்முனை செய‌ல‌க‌த்தின் கீழ் உப‌ செய‌ல‌க‌ம் ஒன்றே இன்று வ‌ரை இய‌ங்குகிற‌து. இத‌னை எந்த‌வொரு வ‌ர்த்த‌மாணி அறிவித்த‌லும் இன்றி தான்தோன்றித்த‌ன‌மாக‌ க‌ல்முனை த‌மிழ் செய‌ல‌க‌ம் என்றும் கல்முனை வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம் என்றும் சில‌ர் அழைத்து வ‌ந்தன‌ர். இத‌னைத்தான் அர‌சாங்க‌ம் உல‌மா க‌ட்சி ம‌ற்றும் க‌ல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹ‌ரீஸ் ஆகியோரின் நியாய‌மான‌ க‌ருத்தை ஏற்று முன்பிருந்த‌து போல் உப‌ செய‌ல‌க‌ம் வ‌ட‌க்கு என‌ பாவிக்கும்ப‌டி அறிவித்துள்ள‌து.

ஆனால் இதையெல்லாம் மூடி ம‌றைத்து க‌ல்முனை வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம் என்ற‌ ஒன்று இய‌ங்கிய‌தாக‌ சாண‌க்கிய‌ன் எம்.பி பொய் சொல்லியுள்ளார். இவ‌ர‌து இந்த‌ப்பொய்க்கு க‌ல்முனை முஸ்லிம்க‌ளில் 95 வீத‌ம் வாக்க‌ளித்த‌ முஸ்லிம் காங்கிர‌சின் த‌லைவ‌ர் ப‌தில‌ளிக்காம‌ல் ச‌ம்ப‌ந்த‌னின் கூடாரத்தினுள் ஒழிந்திருக்கின்றார். ஆக‌வே முஸ்லிம் எம்பீக்க‌ள் ஒற்றுமைப்ப‌ட்டு க‌ல்முனை செய‌க‌த்தை இர‌ண்டாக‌ உடைக்காம‌ல் காப்பாற்ற‌ பாராளும‌ன்றில் ஒருமித்து பேச‌ வேண்டும். அதே போல் வ‌ர்த்த‌மாணி மூல‌ம் ஒப்புத‌ல் இல்லாத‌ செய‌ல‌க‌த்தை இருப்ப‌தாக‌ காட்டி க‌ல்முனையில் த‌மிழ் முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் ப‌கைமையை ஏற்ப‌டுத்த‌ வேண்டாம் என‌ சாண‌க்கிய‌ன் எம் பி போன்றோரை கேட்டுக்கொள்கிறோம் என உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

உலமா கட்சியின் கல்முனை காரியாலயத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கல்முனையில் முஸ்லிம் சமூகம் விழித்திருக்க தூங்கியவன் கண்ணில் குத்திய கதையாக பல கதைகளை தமிழ் எம்.பிக்கள் கூறுகிறார்கள். அதிகாரத்தில் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் இவற்றெல்லாம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது. கிராம நிலைதாரிகள் பிரிவு உருவாக்கத்திலும் பெரிய சூழ்ச்சிகள் புதைந்துள்ளது.

பிரிந்து நின்று சண்டை பிடித்தாலும் கல்முனை விடயத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒருமித்து குரல்கொடுக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் தரப்பில் அப்படி ஒன்றுபட்டு குரல்கொடுக்க யாரும் முன்வருவதாக தெரியவில்லை. கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹ‌ரீஸ் முயற்சித்து கொண்டிருக்கிறார் அவருக்கு இறைவன் கூலி கொடுப்பான். முஸ்லிங்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற கட்சிகள் எதிராணியிலையே இருக்கிறது.

அதிலிருந்து 20க்கு ஆதரவளித்த எம்.பிக்கள் அரசுக்கு ஓரளவு ஆதரவு எனும் நிலைப்பாட்டிலையே இருக்கிறார்கள். அவர்களின் தலைவர்கள் அரசை எதிர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவே முஸ்லிம் சமூகம் அரசின் எதிரியாகவே தான் காட்டப்பட்டு வருகிறது. தமிழர்களும் இந்த நிலைப்பாட்டில் இருந்தாலும் அவர்களின் பிரச்சினைகளை பேச அரச சார்பு தமிழ் எம்.பிக்களை அழைத்து சென்று அரசாங்கத்துடன் பேசுகிறார்கள். அவர்களுக்குள் சமூகம் சார் புரிந்துணர்வு இருக்கிறது. அதே போன்று முஸ்லிம் தரப்பிலும் எமது பிரச்சினைகளை பேச 20க்கு ஆதரவளித்த எம்.பிக்கள் செல்லும் போது அரசின் பங்காளியாக இருக்கும் தேசிய காங்கிரஸ், உலமா கட்சி போன்றவர்களை அழைத்து சென்றால் அது சாதகமாக அமையும்.

20க்கு ஆதரவளித்தவர்கள் அரசை எதிர்த்து நின்று பின்னர் அரசுக்கு ஆதரவளித்தவர்கள். அவர்களுக்கு மக்களிடமும், அரசிடமும் இருக்கும் மரியாதையை விட தொடர்ந்தும் மஹிந்த கூட்டுடன் பயணிக்கும் பங்காளி கட்சிகளுக்கு அரசிடம் மரியாதை அதிகமாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :