மனித நேயமிக்க மக்கள் பிரதிநிதி ஒருவரை இழந்து விட்டோம்!பைஷல் இஸ்மாயில் -
திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரத்னசிங்கம் அவர்களின் இறப்பின் மூலம் மனித நேயமிக்க மக்கள் பிரதிநிதி ஒருவரை நாம் இழந்து விட்டோம் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

துரைரத்னசிங்கம் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதன் மூலம் கல்விச் சமுகத்தின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரிடம் மனிதாபிமானமே மேலோங்கியிருந்தது. இதனால் இன, மத பேதமற்ற செயற்பாடுகளை அவர் முன்னெடுத்து வந்தார்.

எனக்குத் தெரிந்தவரை பல முஸ்லிம் அன்பர்கள் அவருக்கு இருந்தார்கள். அவர்களோடு மிகவும் அன்பாகப் பழகி வந்தார். குடும்ப உறவினர் போல அவர்களது சுக துக்கங்களில் பங்கு பற்றி வந்ததை நான் அறிந்துள்ளேன். இன்றைய காலகட்டத்தில் இவரைப் போன்ற நல்ல பண்புள்ளவர்களை காண்பது அரிது.
அதிகாரமிக்க பதவிகளை அவர் வகித்து வந்தாலும் நல்ல பண்பும் பக்குவமும் அவரிடம் நிறைந்திருந்தது. இதனால் எல்லோரையும் மனிதர்களாக அவர் பார்த்தார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அவரது பன்முகப் படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகளில் பள்ளிவாயல் அபிவிருத்திக்கும் நிதி ஒதுக்கீடுகளை அவர் செய்திருந்தமையை நான் நன்கு அறிவேன்.

உயிரினங்களைப் பொறுத்த வரை இந்த உலகம். நிரந்தரமில்லாதது. ஓவ்வொருவருக்கும் பிரிவதற்கான நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. அவரவருக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் நாம் போய்த்தான் ஆக வேண்டும். அந்த வகையில் துரைரத்னசிங்கம் அவர்கள் இப்போது எம்மை விட்டும் பிரிந்து சென்றுள்ளார். இவரைப் போல நாமும் ஒருநாள் பிரிந்து செல்வோம் என்பது உறுதி.

இவரது மறைவின் மூலம் மனித நேயமிக்க ஒருவரை நாம் இழந்துள்ளோம். இனவாதமும், மதவாதமும் போசிக்கப்பட்டு வரும் இன்றைய காலத்தில் இவரது இழப்பு கவலையைத் தருகின்றது. இவரது மறைவின் மூலம் பெருங் கவலையடைந்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதலைக் கொடுக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன் என அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :