கொரோனாவை கட்டுப்படுத்த சாய்ந்தமருதில் அனைத்து வர்த்தக நிலையங்களும் நேற்றிரவு மூடப்பட்டுள்ளது



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன் அவர்களின் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட மறு அறிவித்தல் வரையில் வர்த்தக நிலையங்களை தினமும் மாலை 07.00 மணிமுதல் மூடுவது எனும் தீர்மானத்திற்கு அமைய கல்முனை பிராந்தியத்தின் கீழுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் நேற்றிரவு 07.00 மணிமுதல் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வர்த்தகர்களும் பிராந்தியத்தில் கொவிட்-19 யினை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கினர். நாட்டில் பரவலாக உள்ள கொரோனா அலையை கட்டுப்படுத்த பண்டிகை காலம் என்பதனால் சுகாதார துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாகவே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் இந்த முன்னெடுப்பு நடைபெற்று வருகிறது.

சாய்ந்தமருதில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அல்-அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.நிஸ்தாரின் மேற்பார்வையில் நேற்றிரவு சாய்ந்தமருது பஷார் மற்றும் உள்ளூர் வர்த்தக நிலையங்கள் கொவிட்-19 வைரசினை முன் கூட்டியே கட்டுப்படுத்தும் முகமாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க அனைத்து கடைகளும் இரவு மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த களவிஜயம் மேற்கொண்டனர். இந்த விஜயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பயிலுநர் குழுவும் கலந்து கொண்டனர். அது போன்றே ஏனைய பிரதேசங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :