கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்; சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரன் - உயர்நீதிமன்ற தீர்ப்பு



கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பும், விசேட பெரும்பான்மையும் அவசியம் எனவும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

குறித்த சரத்துக்களை திருத்தம் செய்ய வேண்டிய முறை தொடர்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு 62 பக்கங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளான புவனெக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, முர்த்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் த சில்வா ஆகியோரினால் இந்த தீர்ப்பு வழங்கப்படுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :