ஸ்டாலின் ஆளுமையும், ஆற்றலும், பணிவும்மிக்க வியத்தகு தலைவர் ட்விட்டரில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்துஎம்.எஸ்.எம்.ஸாகிர்-
மிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், ஆளுமையும், ஆற்றலும், பணிவும்மிக்க வியத்தகு தலைவரென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவியேற்பிற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் விடுத்துள்ள ட்விட்டர் வாழ்த்துப் பதிவிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அப்பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும், தோழமைக் கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு அவர் அமைத்துள்ள ஆட்சியும், அவரது திராவிடக் கொள்கைப் பற்றும் அபாரமானவை எனவும், அவர் ஆளுமையும், ஆற்றலும் , பணிவும்மிக்க வியத்தகு தலைவர் எனவும் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :