ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் அர்ஸாத் மாவட்டத்தில் 2 ம் இடம் பெற்று மருத்துவத் துறைக்கு தெரிவு



எச்.எம்.எம்.பர்ஸான்-
வெளியான க.பொ.த.உயர் தரப் பரீட்சை பெறுபேற்றின் படி ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் முகம்மது உவைஸ் முகம்மது அர்ஸாத் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை – மாவடிச்சேனை எம்.பி.சீ.எஸ் முகவரியில் வசித்து வரும் எம்.எல்.எம்.உவைஸ், எம்.எஸ்.ஜெமீலா தம்பதிகளின் புதல்வரான அர்ஸாத் இளம் வயதிலிருந்தே கற்றல் நடவடிக்கையில் மிகவும் ஆர்வம் கொண்டவராவார்.

இவர், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதோடு, க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருந்தார்.

இவ்வாறு கல்வித் துறையில் சாதனைகளை படைத்து மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இம் மாணவனுக்கு பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாஹ் மற்றும் கல்வி அதிகாரிகள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :