தெஹிவளை கல்கிசை பிரிவில் கொவிட் 19 தடுப்பூசி!அஷ்ரப் ஏ சமத்-
சீனாவில் இருந்து இலங்கைக்கு தருவிக்கப்பட்ட கொவிட் 19 தடுப்பூசி சினேபாம் தெஹிவளை கல்கிசை பிரிவில் உள்ள 25க்கும் மேற்பட்ட மருத்துவ கிளினிக் நிலையங்களில் முதலாவது வக்சின் வழங்கப்பட்டு வருகின்றது.

இதற்காக ஒவ்வொரு கிராம சேவகா் பரிவில் 1000 தடுப்பூசிகள் என்ற அடிப்டையில் தெகிவளை, ரத்மலானையில் களுபோவில, போன்ற பிரதேசங்களில் கடந்த 2 வாரகாலமாக இலட்சத்துக்கு அதிகமான பொதுமக்களுக்கு இலவச கொவிட் 19 தடுப்பூசி ஏற்றபட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றும் (18.05.2021 ) ரத்மலானையில் வெடிக்கந்த கிராம சேவகா் பிரிவில் ஆயிரத்திற்கும் அதிகமானவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந் நிலையங்களை சுகாதார அதிகாரி அவா்களின் தலைமையில், சுமாா் 35 தாதியா்கள் சுகாதார ஊழியா்கள், தெகிவளை கல்கிசை மாநகர சபை ஊழியா்கள் பாதுகாப்பு படையினா் உதவி கொண்டு மிகச் சிறப்பாக இத் திட்டம் நடைமுறைப்படுத்து வருகின்றது. முதலாவது தடுப்பூசி ஏற்றியவா்களுக்கு தடுப்பூசி அடடை வழங்கப்ட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசி 4 வாரங்களுக்கு பின்னா் வழங்கப்படவுள்ளதாகவும் இவ் கொவிட் அட்டையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களை வைத்திய அதிகாரி வேண்டிக்கொண்டார். தடுப்பூசி வழங்க முன்னா் ஒவ்வாமை , இதயதுடிப்பு உள்ள நோயாளா்களுக்கு முன் கூட்டி பரசிலிக்கப்படுகின்றனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :