பல கல்வியாளர்களையும் பட்டதாரிகளையும் பல தசாப்தங்களாக உருவாக்கிய IDM Nation Campus கல்வி நிறுவனத்தின் 2020-2021 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில்
நாளை (03/04/2021) மதியம் 12:30க்கு கல்வி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி.ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையில்
மிகக் கோலாகலமாக இடம் பெற உள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக: இலங்கை சட்டக் கல்லூரி அதிபர்
ஜனாதிபதி சட்டத்தரணி.திருமதி. பத்மினி இந்திர சமரசிங்க.
மற்றும் பல கல்விமான்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இப் பட்டமளிப்பு விழாவில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள்
சட்டத்துறை மற்றும் ஏனைய துறைகளில் இளமாணி,முதுமாணி பட்டங்களைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment