தம்பட்டை பகுதியில் அதிரடிப்படைமுகாம் எதற்கு? மட்டு.மாவட்ட எம்.பி.இரா.சாணக்கியன் கேள்வி



வி.ரி.சகாதேவராஜா-
க்கள்செறிந்துவாழும் தம்பட்டையில் அதிரடிப்படைமுகாம் அமைக்கப்பட்டுவருகின்றது. மீண்டும் ஓர் இருண்ட யுகத்திற்குள் செல்கின்றோமா? அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பல பிரதேசங்களின் வளங்கள் அபரிக்கப்படுகின்றது. எமது வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி கடந்த காலத்திலே வாக்குகள் பெற்றெடுத்த ஆளுந்தரப்பு அரசியற் பிரமுகர்கள் யாரும் இவை தொடர்பில் குரல்கொடுத்ததாகத் தெரியவில்லை.இதுதானா ஆளுந்தரப்பு தமிழ்அரசியல்வாதிகளின் அபிவிருத்தி?

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்..

சாணக்கியன் எம்.பி. மேலும் கூறுகையில்:

அம்பாறை மாவட்டத்திலும் இல்மனைட் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.
கடந்த காலங்களில் அபிவிருத்தி என்ற விடயங்களை நம்மவர்களும் மேற்கொண்டார்கள். ஆனால் அவர்கள் விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் செய்யத்தவறிய ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் விளம்பரப்படுத்தி கடந்த தேர்தலில் எங்களுடைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு ஒரு தனிநபரின் செயற்பாடு காரணமாக இருந்தது.

எங்களுக்குள்ளேயே சிலரை வைத்து பிரச்சினைகளை வளர்த்துவிட்டு அதில் தாங்கள் பலனடைவதற்குப் பலர் முயற்சிக்கின்றார்கள் என்றும் அவர் மேலும்தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :