திருகோணமலையிலுள்ள இரு பாடசாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.



எப்.முபாரக்-
திருகோணமலையிலுள்ள இரு பாடசாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவர்களின் வருகை கணிசமாக குறைவடைந்தமையை தொடர்ந்து பாடசாலையும் மூடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ. பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 46பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சுகாதார நடைமுறைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறும் அவர் மக்களை வலியுறுத்துள்ளார்.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று(23) (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வீ.பிரேமானந்த் மேலும் கூறியுள்ளதாவது:

“திருகோணமலையில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இம்மாதத்தில் மாத்திரம் இதுவரை 310 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது.


குறிப்பாக உப்புவெளி மற்றும் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதேவேளை திருகோணமலை மாவட்டத்திலுள்ள இரண்டு பாடசாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையினால் அப்பாடசாலைகளில் மாணவர்களது வருகை குறைவாக காணப்படுவதால் குறித்த பாடசாலை நிர்வாகத்தினரால் மூடப்பட்டுள்ளது.


அத்துடன் அத்தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களுக்கு அன்ரிஜென் மற்றும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :