கோவிட் தொற்று காலத்தின் போது பெண்களின் சமத்துவத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் ஈடுசெய்ய முடியாதவை



இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

எஸ்.எல். அப்துல் அஸீஸ்-
கொரோனா தொற்று காலங்களில் பெண்கள் பல்வேறு வகையான சவால்களை சந்தித்துள்ளனர். பெண்களின் பால்ரீதியான சமத்துவம், உரிமைகளுக்கான கௌரவம் போன்றவற்றுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதவாறு வீட்டுச் சூழல் இருந்தது. கோவிட் தொற்று காலத்தின் போது பெண்களின் சமத்துவத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் ஈடுசெய்ய முடியாதவை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்குமுகமாக ஆணைக்குழு காரியாலயத்தில் (31.03.2021) அப்துல் அஸீஸ் தலைமையில் நடைபெற்ற செயலமர்வின் போது, அஸீஸ் கருத்துத் தெரிவிக்கும் போது, இன்று பெண்கள் கொள்கை, சட்டம், ஆகியவற்றுக்கான சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும், உருவாக்குவதற்காக முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர். இவ்வாறு பரந்து பட்ட சமூக இயக்கங்களி;ல் பிரிக்க முடியாத பகுதியாக பெண்கள்; செயற்பட்டு வருகின்றனர்.

பெண்களுக்கான உரிமைகளும், பாதுகாப்பும் சட்டத்தில் தெளிவாக இருக்கின்ற போதிலும் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான துஸ்பிரயோகங்கள், பாலியல் வன்முறைகள் பரவலாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இதனைச் செய்கின்றவர்கள் ஏதோ ஒரு வகையில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். இவர்களுக்கான கடுமையான தண்டனைகள் எதிர்காலத்தில் கொண்டு வரப்படவேண்டிய தேவை இருக்கின்றது.

பெண்கள் இருக்கின்ற உரிமைகளை பாதுகாக்க போராடுகின்ற அதேவேளை, அடிமட்டத்திலுள்ள பெண்களின் அன்றாடப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். இன்றைய உலகில் மிகவும் கொடுரமான அனர்த்தத்தினை கோவிட்-19 ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார தாபனம், சுகாதாரத் துறைகள், மருத்துவ ஆய்வுளைச் செய்வோர்; உட்பட அனைத்துத் துறைகளுக்கும் பாரிய சவால்களை இது ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் கணவனின் ஊதியத்தை மாத்திரம் நம்பி இருக்கும் குடும்பங்களில்; வீட்டு வேலைகள் அதிகரித்து இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் எனவும் அஸீஸ் கருத்துத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் வளவாளர்களாக பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர். ஐ.எல். முஹம்மட் றிபாஸ், சுகாதாரத்தில் எற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றியும், கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம் ஜாபிர் கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றியும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றும் டொக்டர். எம்.ஏ.சி.எம். பஸால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேலைவாயப்பிற்காக செல்வோர்களில்; எற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றியும், பாதிப்புக்குள்ளான பெண்களின் அமைப்பின் தலைவி வாணி சைமன் பெண்களின் வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றியும், சமூக சிற்பிகள் நிறுவனத்தின் சட்ட உத்தியோகத்தர். எம். சுதர்சினி குடும்ப விவகாரங்களில் பெண்களுக்கு எற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றியும் கருத்துரைகளை வழங்கினர்.

இந்நிகழ்விற்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :