மர்ஹூம் வை.எம்.ஹனீபாவின் நினைவாக கிழக்கு வாசலில் கத்தமுல் குர்ஆன் நிகழ்வும் துஆ பிரார்த்தனையும் !!

நூருள் ஹுதா உமர்-

சாய்ந்தமருது முகையதீன் ஜும்மா பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தலைவராக இருந்து அண்மையில் காலமான மர்ஹூம் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா அவர்களின் நினைவாக கத்தமுல் குர்ஆன் ஓதிதுஆப் பிரார்த்தனை செய்யும் நிகழ்வு, தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்களின் தலைமையில் கட்சி தலைமையகமான "கிழக்கு வாசலில்" நேற்று மாலை இடம் பெற்றது.

இந்நிகழ்வில், அக்கரைப்பற்று மாநகராட்சி மேயர் அதாஉல்லா அஹமட் சகி, இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபதுல் கரீம் உட்பட நிருவாகிகள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபை உறுப்பினர்கள், தேசிய காங்கிரஸ் கட்சியின் சாய்ந்தமருது மாளிகைக்காடு முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்‌ என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :