இலங்கை மின்சார சபை பாவனையாளர் சேவை நிலையத்தின் புதிய மின் அத்தியட்சகராக போ. ஜெயராஜ் கடமையை பொறுப்பேற்றார்.



நூருல் ஹுதா உமர்-
லங்கை மின்சார சபையின் சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையத்தின் மின் அத்தியட்சகராக இருந்து வந்த பொறியியலாளர் ஏ.எச்.எம். பயாஸ் அவர்களின் இடமாற்றத்தை அடுத்து வெற்றிடமான சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையத்தின் புதிய மின் அத்தியட்சகராக பொறியியலாளர் கோ. ஜெயராஜ் [MEM, MBA(r), BEng(Hons), GDip(EE), Ad.Dip( Tele.com syst), MIET, AMIESL, AEng (ECSL) ] நியமிக்கப்பட்டு கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை (05) சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையத்தில் இடம்பெற்றது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கடமையாற்றி பின்னர் கடந்த நான்கு வருடங்களாக இக்னியாகல நீர்மின் நிலையத்தில் மின் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த பொறியியலாளர் கோ. ஜெயராஜ் சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையத்தின் புதிய மின் அத்தியட்சகராக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பதவியேற்கும் இந்நிகழ்வில் இலங்கை மின்சார சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :