உள்நாட்டு உல்லாச பயணிகளுக்கு பயணசேவையை வழங்கும் வாகன சாரதிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு



எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் , அறுகம்பே பிரதேசத்தில் சுற்றுலா துறையிலுள்ள வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாச பயணிகளுக்கு பயணசேவையை வழங்கும் வாகன சாரதிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு பொத்துவில் , அறுகம்பே பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றது.
சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையும் தொழிற்பயிற்சி அதிகார சபையும் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி செயலமர்வு சுற்றுலா சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்றது.
ஏற்கனவே தொழிற்பயிற்சி அதிகார சபையினால் பயிற்சி வழங்கப்பட்ட மேற்படி சாரதிகளுக்கு அடையாள அட்டைகளை மிக விரைவாக பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் சந்துரூபன் அனுருத்த பிரதம அதிதியாகவும் , அறுகம்பே சுற்றுலா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.திசாநாயக கெளரவ அதிதியாகவும் , அறுகம்பே ஆட்டோ உரிமையாளர் சங்க தலைவர் ஏ.முஸம்மில் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் சாரதிகளுக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :