திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜ் தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்



எம்.ஏ.முகமட்-
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர உத்தியோகத்தரான ஜே.எஸ்.அருள்ராஜ் தமது கடமைகளை இன்று மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான இவர் 2003 ம்ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

கிண்ணியா,சேருவல பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும் முன்னர் இருந்த வடகிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றிலும் கடமையாற்றியுள்ளார்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் , கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையை பதவியேற்க முன்னர் இவர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :