யானைத் தொல்லைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மின் விளக்குகள் வழங்கி வைப்பு



எச்.எம்.எம்.பர்ஸான்-
யானைத் தொல்லைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மின் விளக்குகள் ஞாயிற்றுக்கிழமை (4) வழங்கி வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் போதியளவு மின் விளக்குகள் இன்மையால் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன.

இதனால் அப்பகுதி மக்களும் அப்பகுதி ஊடாக பயணிக்கும் விவசாயிகளும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனைக் கவனத்திற் கொண்ட மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியிடம் தெரிவித்ததற்கு அமைய முன்னாள் பிரதி அமைச்சர் குசைன் பைலாவின் நிதிப் பங்களிப்புடன் ஐம்பது மின் விளக்குகளும் அதனைப் பொருத்தும் உபகரணங்களும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர், பிரதேச சபை உறுப்பினர்கள் பள்ளிவாசல்கள் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :