"யாவருக்கும் கழிவறை வசதி" -செயற்றிட்டம் ஆரம்பம்



வி.ரி.சகாதேவராஜா-
மைன்ட்அப் மன்றத்தின் ஏற்பாட்டிலும் நெறியாள்கையிலும் மக்களின் சுகாதார மற்றும் சுகவாழ்வு மேம்பாட்டுக்கான திட்டங்களின் ஓர் அங்கமான HYGEINEX - யாவருக்கும் கழிவறை வசதி - (Sanitary Latrines for All )செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று செங்காமம் ரொட்டரி கழக கட்டடத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் போது, முதற்கட்டமாக ஐந்து கழிவறைகள் நிர்மாணிப்பதற்கான வேலைகள், அல்ஹாஜ் சதக்கத்துல்லா மன்றத்தின் தலைவர் அல்ஹாஜ் எம். எஸ். எம். சப்ராஸ் அவர்களின் அனுசரணையில் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மைன்ட்அப் மன்றத்தின் தொடக்கம், பயணம் அதன் செயல்வடிவங்கள் பற்றி மன்றத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான, தாரிக் அஸீஸ் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின் செயற்றிட்டமான மரங்களை வளர்க்கும் மனங்களை வளர்ப்போம் "மில்லியன் மரங்கள்" செயற்றிட்டத்திற்காக மரங்களும் நடப்பட்டன.

இந்நிகழ்வில், தொழிலதிபர்களான அல்ஹாஜ் எம். எஸ். எம். சப்ராஸ்,அல்ஹாஜ் எம். அபூபக்கர், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம். எச். றஹிம், முன்னாள் பிரதேச சபை தவிசாளர், பிரதேச உறுப்பினர் எம். எஸ்.எம். மர்சூக், வைத்தியர் எம். எம். எம். சமீம், வைத்தியர் எஸ். மிஃப்ரார், சமாதான கற்கை நெறிக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல். றியாஸ், சம்மாந்துறை அ.இ.ம.கா அமைப்பாளர் எம். றனூஸ், உலமாக்கள், நலன்விரும்பிகள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :