அச்சுறுத்தல் இல்லாத நிலையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள தேவாலயங்கள்.



நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அதிஉச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருகின்றது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.

எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லாத இன்றைய காலத்தில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதற்குள் அரசியல் காரணிகள் இல்லையென்று கூறமுடியாது.

ஆனால் 2019 இல் இவ்வாறு தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தால், பல அப்பாவிகளின் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும். அத்துடன் பாரிய அனர்த்தங்களும் தடுக்கப்பட்டிருப்பதுடன், சந்தேகத்தின் பேரில் குண்டு தாக்குதலுடன் தொடர்பில்லாத எவரும் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

இன்று எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தல்களோ அல்லது தாக்குதல் நடைபெறும் என்ற புலனாய்வுத் தகவல்களோ இல்லாத நிலையில் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது கிறிஸ்தவ உலகினை திருப்திப்படுத்துவதற்கே அன்றி வேறொன்றுமில்லை.

2019 ஈஸ்டர் தினத்தில் நடைபெறப்போகின்ற பயங்கரவாத செயல்கள் பற்றிய முழு விபரங்களையும் முன்கூட்டியே துல்லியமான புலனாய்வுத் தகவல்களை பெற்றிருந்தும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அன்றைய அரசு முற்படவில்லை.

தற்கொலை தாக்குதல் ஒன்றுக்கான ஏற்பாடுகளும், அது நடைபெற உள்ள இடங்கள் பற்றிய விபரங்களையும், யார் தாக்குதல்களை நடாத்தப்போகின்றார்கள் என்ற தகவல்களையும் அறிந்திருந்தும், அன்றைய ஆட்சியாளர்களினால் அதனை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்ததானது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு அவர்களும் பங்காளிகள் என்பதனை காட்டுகின்றது.

எனவே பாதுகாக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அலட்சியமாக அல்லது வேடிக்கை பார்த்துவிட்டு, இன்று தேவாலயங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் படைகளை குவிப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :