ஏ.எம்.நௌஸாத் எழுதிய அஸ்-ஸிறாஜின் வரலாற்றேடு நூல் வெளியீட்டு விழா


எம்.எம்.ஜபீர்-

தம்பாவா முகம்மது நௌஸாத் எழுதிய அஸ்-ஸிறாஜின் வரலாற்றேடு நூல் வெளியீட்டு விழா சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இன்று (02) இடம்பெற்றது.

மத்தியமுகாம் சாளம்பைக்கேணி அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலத்தின் அதிபர் எஸ்.எம்.எம்.யூசுப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், கல்முனை பிராந்திய மலேரியா தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌஷாட், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்வி பணிப்பாளர்களான எஸ்.எம்.எம்.அமீர், எம்.எச்.எம்.ஜாவிர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர்கள், பிரதேச முக்கியஸ்தர் பலர் கலந்து கொண்டனர்.

நூலின் முதல் பிரதியினை நூலசிரியரின் தந்தை எஸ்.எம்.ஆதம்பாவா ஒய்வுபெற்ற ஆசிரியர்களான எஸ்.எம்.எம்.அபூபக்கர், எஸ்.எம்.அஹம்மட்லெவ்வை, மைஹோப் குறூப் தவிசாளரும் தொழில்லதிபருமான சித்தீக் நதீர், ஒய்வுபெற்ற அதிபர் எஸ்.அபூபக்கர், எம்.ஏ.எம்.ஹில்மி, ஏ.எல்.முஹம்மட் ஆகியோர்கள் பெற்றுக் கொண்டனர்.

நூல்பற்றிய நயவுரையினை தென்கிழக்கு பல்கலைகழக மொழித் துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், நூல்பற்றிய சிறப்புரையினை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம்.பௌஸர் ஆகியோர்கள் நிகழ்த்தினர்கள்.

நாவிதன்வெளி கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீழ் சாளம்பைக்கேணி அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலத்தின் 1953 ஆண்டு தொடக்கம் 2020 ஆண்டு வரையான சுமார் 67 ஆண்டு காலப் பகுதிற்கான பாடசாலையின் வரலாற்றை சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளரும் பாடசாலையின் பழைய மாணவனுமான ஆதம்பாவா முஹம்மது நௌஸாத் எழுதிய அஸ்-ஸிறாஜின் வரலாற்றேடு எனும் நூலாகும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :