"சுவிட்சமான வாரம்" தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக கிராம மட்ட உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு

சர்ஜுன் லாபீர்-

மார்ச் 2 - 3 வாரம் அரசினால் "சுபிட்சமான வாரம்" என பெயர் குறிப்பிட்டிருப்பதுடன் இவ்வாரத்தினுள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு உரிய பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இதற்கமைய நாடுபூரகவும் இரண்டு லட்சம் குடும்பங்களை வலுவூட்டம் செய்வது தொடர்பாக எதிர்வரும் இரு வாரங்களில் வரிசை அமைச்சுக்களின் பிரதேச உத்தியோகத்தர்களுடன் சந்திப்பு மற்றும் பயிற்சிப்பட்றை நடாத்தப்படுதல் வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கிராம மட்ட குழுக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று(3) கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி தலைமையில் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ் நெறிப்படுத்தலில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.எம் சத்தார்,எம்.எஸ் நிசார்,சப்றாஸ் மன்ஸூர்,சமீனா பரீட்கான்,தொழிலதிபரும்,அரசியல் பிரமுகருமான தேசமானிய ஏ.பி ஜெளபர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் உட்பட கிராம மட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :