கல்முனை- ப்ளூ நேவீஸ் அணியின் புதிய கழக சீருடை அறிமுக நிகழ்வும் வருடாந்த ஒன்று கூடலும் கல்முனையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை (26)இடம்பெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ .எல் அப்துல் அசீஸ் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் முபாரக் அலி அவர்களும் கல்முனை லெஜன்ட் விளையாட்டுக் கழகத்தினுடைய செயலாளரும் கல்முனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரியுமான ஏ.எல். முஹம்மது அஸீம், லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் பிரதித் தலைவர் அப்துல் கரீம், தவிசாளர் இனாம் மெளலானா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந் நிகழ்வுகள் ப்ளூ நேவீஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர், என். எம். எம். றுஸ்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

0 comments :
Post a Comment