ஓல்டன் தோட்ட நிர்வாகத்துடனான இரண்டாம் கட்ட பேச்சுவாத்தை....


நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-

ல்டன் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டினையடுத்து நிர்வாகத்துடன் இடம்பெற்ற சேச்சுவர்த்தையின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 10 திகதி மீண்டும் இடம்பெறும் என ஜி.நகுலேஸ்வரன் தெரிவித்தார்

ஹொரண பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட ஓல்டன் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக கடந்த மாதம் 02 ஆம் திகதி முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஓல்டன் தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையிலான சமரச பேச்சுவாத்தையொன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்ரன் தலைமையில் 05/03 மாலை இடம்பெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கமைய இடம்பெற்ற இப் பேச்சுவாத்தை கவரவில தோட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது , ஓல்டன் தோட்ட நான்கு பிரிவுகளை சேர்ந்த அனைத்து தொழிற்சங்க தலைவர்கள், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர் ரட்ணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிராந்திய முகாமையாளர் வசந்த குணவர்தவிற்கு இடையில் இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தையில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள 600 மேற்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு திரும்ப செய்தல் தொடர்பிலும், நீதிமன்ற விசரணையிலிருக்கு இருவேறு சம்பவங்கள் தொடர்பிலும் அதில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது தொலை பேசியூடாக பழனி திகாம்பரம் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தில் பேச்சாளர் ரொஷான் ராஜதுரைக்கும் இடையில் பேச்சுவத்தையொன்றும் இடம்பெற்றதாகவும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக நகுலேஸ்வரன் தெரிவித்தார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :