சர்வதேச பாவனையாளார் உரிமைகள் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் விழிப்புணர்வு



எம்.என்.எம்.அப்ராஸ்-
ர்வதேச பாவனையாளார் உரிமைகள் தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையுடன் இணைந்து நடாத்தும் “விஷேட நடமாடும் விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற்று வருகின்றது
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் சர்வதேச பாவனையாளார் உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று (15) காலை நடைபெற்றன.
அம்பாறை மாவட்ட செயலகத்தின் பாவனையாளர் அதிகார சபையின்
மாவட்ட பொறுப்பாளர் டி.சுதர்சனின் வழிகாட்டலில், விழிப்புணர்வு நிகழ்ச்சி பிரிவின் அதிகாரி ஸமான் ஸாஜீத் மற்றும் றஸ்லான்,சுபையிர்,றாபீ தலைமையில் இடம்பெற்றது.
மாவட்ட செயலகத்தின் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரினால், மாவட்ட செயலக முன்றல், அம்பாரை நகரம், கல்முனை பிரதான பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளுடன் மோட்டார் போக்குவரத்து பொலிசார் இணைந்து விழிப்புணர்வு நடவடிகையில் ஈடுபட்டனர் இதன் போது மோட்டார் வாகனம் செலுத்துனர்களின் “பாதுகாப்பானதும் தரமானதுமான தலைக்கவசம்” கொள்வனவு செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் சம்மந்தமாக
விளக்கமளிக்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டுபிபிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :