இலங்கை அரச சட்டங்களை முஸ்லீம் சமூகம் முழுமையாக ஏற்று நடக்கின்றது. -முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்



லங்கை முஸ்லீம்கள் இந்த நாட்டையும் நாட்டின் அரச சட்டங்களையும் முழுமையாக மதித்து பின்பற்றக்கூடியவர்கள் ஆனால் இன்று அரசியல் ரீதியான சில இனவாதிகளினால் முஸ்லீம்கள் மீது இனவாத தீப்பந்து வீசப்படுகின்றது இனவாதத்தை தூண்டும் வகையில் யாரும் பேசக்கூடாது என்று சட்டம் இயற்றிவிட்டு முஸ்லீம்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்பது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது

இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் சைவம் மற்றும் கிறிஸ்தவ மக்களையோ அல்லது சிங்கள மக்களையோ இனரீதியான கருத்துக்களை கொண்டு தாக்குவதில்லை அதேபோல அவர்களுடனான முரண்பாடுகளையும் விரும்புவதில்லை மாறாக ஒவ்வொரு மதத்தவர்களுடனும் இனத்தவர்களுடனும் ஒன்றிணைந்து வாழவே முயட்சிக்கின்றனர்

இவ்வாறான ஒற்றுமையினை விரும்பக்கூடிய முஸ்லீம்களை இந்த நாட்டில் இருக்கின்ற இனவாதிகள் தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவது மிகவும் கவலையளிக்கின்றது இந்த நாட்டிலே சிறந்த சட்டத்துறை வல்லுநர்கள் உண்மையான நீதிபதிகள் சிறந்த வழக்கறிஞர்கள் அதிகாரம் படைத்த முக்கிய அரச அதிகாரிகள் இருக்கின்ரீர்கள் உங்களை நாங்கள் முழுமையாக நம்புகின்றோம் இனவாதத்தை அளித்து இந்த நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி ஒற்றுமையான சமூகத்தை உருவாக்க வேண்டியது எங்கள் அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது

எனவே எதிர்வருகின்ற நாட்கள் இந்த நாடு சமாதானமான அனைத்து இன மக்களும்ஒன்றுபட்டு வாழ அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் இந்த ஒற்றுமைக்கான செயற்பாட்டில் நான் முதல் ஆளாக இந்த சமூகத்திற்காக முன்னிருப்பேன் மக்களாகிய நீங்களும் முன்னிற்க வேண்டும் என்றும் உங்களை வேண்டிக்கொள்கிறேன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :