எவ்வாறு ஒரு பொதுமகன் சட்டத்தை தன கையில் எடுக்க கூடாதோ அதே போல அரச அதிகாரிகளும் சட்டத்தை தன கையில் எடுத்து நடக்கக்கூடாது அதற்காகவே பல நீதிமன்றங்கள் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் உள்ளார்கள்
இந்த ஒரு செயலுக்காக முழு காவல் துறையினரையும் நாங்கள் தவறாக கூற முடியாது அதிகமான இடங்களில்நாண்கள் பார்த்திருக்கின்றோம் பல காவல்துறை அதிகாரிகள் இரவு பகல் பாராமல் மக்களுக்கு உண்மையான சேவைகளை தியாகங்களை செய்து வருகின்றார்கள் ஆனால் ஒருசில அதிகாரிகள் இவ்வாறான தவறுகளை செய்யும் பட்சத்தில் நாட்டின் சட்டம் கேள்விக்குறியாகவும் பாரிய பின்விளைவுகளையும் கொண்டுவருகின்றது
எனவே நாங்கள் காவல்துறை மட்டும் குறை கூறுவதை நிறுத்திவிட்டு பொதுமக்கள் நீங்களும் சட்டத்தை மதித்து அவர்களுக்கான கண்ணியத்தை கொடுங்கள் வீதி விபத்து என்பது இன்று சாதாரண ஒன்றாக மாறி இருக்கின்றது இதை எவ்வாறு கட்டுப்படுத்துவதென்று காவல்துறை பாரிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது ஆனால் பொதுமக்கள் நீங்கள் இதற்கு முயட்சி செய்யாமல் விபத்துக்களை தடுக்க முடியாது எவ்வாறு ஒரு காவல்துறை அதிகாரி தாக்கியது தவறோ அதேபோல நாமும் வீதிகளில் வீதி ஒழுங்குகளை மீறி நடப்பது தவறு
எனவே நாமும் சத்தத்தோடு இணைந்து கட்டுப்பட்டு நடக்கவேண்டும் அதேபோல காவல்துறை அதிகாரிகளும் இவ்வாறான மனித உரிமை மீறல் தாக்குதல்களை நடத்தாமல் இருக்க வேண்டும்
0 comments :
Post a Comment