பெண் ஆளுமைகளை தாங்கி வரும் "துணிந்தெழு" சஞ்சிகை இலங்கையில் அறிமுகம்.



நூருள் ஹுதா உமர்-
ட்டாரை தளமாக கொண்டு வெளிவரும் "துணிந்தெழு சஞ்சிகை பிரதி" அறிமுகம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை தனியார் விடுதியில் நடைபெற்றது.
ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் பிரதானியும் துணிந்தெழு சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான ஜே. எம். வாஸித்தின் தலைமையில் உள்ள ஆசிரியர் குழாமின் வெளியீடாக இலங்கையில் சாதித்துக் கொண்டிருக்கும் ஆளுமை பெண்களின் அறிமுகம் முதல் கலை, இலக்கிய, சமூக விடயங்களை தாங்கி வாராந்தம் வெளிவரும் இந்த சஞ்சிகையை ஸ்கை தமிழின் அலுவலகர் பாத்திமா சிரோணி அறிமுகம் செய்து வைத்து பிரதிகளை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் றமிஸ் அபூபக்கர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசமான்ய எஸ்.எல்.எம். ஹனிபா உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :