ஈஸ்டர் தாக்குதல் முஸ்லிம் சமுகத்தின்மீது திணிக்கப்பட்ட பழி. சூத்திரதாரி யார்? உலகுக்கு தெரியப்படுத்துங்கள் - முஸரப் எம்.பி.



வி.ரி.சகாதேவராஜா-
ஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யாரோ ஒருவர் இருக்கையில் இது முஸ்லிம் சமுகத்தின்மீது வேண்டுமென்று திணிக்கப்பட்ட பழி என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
இவ்வாறு அ.இ.மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஸரப் முதுநபீன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:
உலகம் முழுவதிலும் இஸ்லாம்போபியா என்ற போர்வையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுக்கொண்டுவருகிறார்கள். அதுபோல இலங்கையிலும் இத்தாக்குதலை மையப்படுத்தியதாக ஒரு நாடகம் அரங்கேறியிருக்கிறது. அதுவும் முஸ்லிம்கள் மீது குறிவைத்து தாக்கப்படும் பழிவாங்கல் செயற்பாடாகப்பார்க்கிறோம்.
இத்தாக்குதலின் சூத்தரதாரி யார் என்பதை அரசாங்கம் இந்த உலகுக்குத் தெரியப்படுத்தவேண்டும். இந்த அறிக்கை மூலமாக பல அமைப்புகள் தடைசெய்யப்படவேண்டும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் பொதுபலசேனாவைத் தடைசெய்யவேண்டிய அவசியமில்லை என சிலர் குரல்கொடுக்கிறார்கள்.உண்மையில் இலங்கையில் பொதுபலசேனா உருவாகியபின்புதான் இனங்களிடையே பிளவுகள் தோற்றம்பெற்றன.குறிப்பாக முஸ்லிம்கள் பற்றிய புரிதல் ஏனையஇனங்களிடையே பிழையாக தோற்றுவிக்கப்பட்டது.

குற்றவாளியாக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் ஜனாதிபதி தாக்குதலையிட்டு நன்குதெரிந்திருந்தும் பதில் பாதுகாப்பு அமைச்சரையும் நியமிக்காமல் அவர் அக்காலப்பகுதியில் சிங்கப்பூர் மற்றும் இந்தியா சென்றிருக்கிறார்.

எனவே உண்மையான சூத்திரதாரி யார் என்பதை உலகறியச் செய்யவேண்டும். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :