இலங்கையின் பிரபல ஓட்டோ மொபைல் சேவை வழங்குனரான ஸ்டேர்லிங் ஓட்டோ மொபைல் லங்கா தனியார் நிறுவனம் sterlingcars.lk என்ற இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் பல்வேறு வகையான வர்த்தக நாமங்கள் மற்றும் மொடல்களின் விரிவான வாகன வரிசையை வழங்குகின்றது.
நுகர்வோருக்கு இலவசமாக எளிமையான முறையில் வேகமாகவும், நம்பகத் தன்மையுடன் சேவையை வழங்கவுள்ளது. புதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கார்களை ஒன்லைன் மூலமாக வாகனத்தின் சரியான மதிப்பை அறிந்து பெற்றுக் கொள்ளக்கூடியதாக இதன் சேவை வசதிகள் அமைந்துள்ளன.
மேற்படி இலவச சேவையை வழங்குவது தொடர்பாக விளக்கம் அளிக்கும் ஊடக மாநாடும் குறித்த நிறுவனத்தின் இணையத்தளத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு சினமன் கிறேண் லேக் சைட்ட ஹோட்டலில் நிறுவனத்தின் பணிப்பாளர் ரேணுகா விஜேயசிறிவர்த்தன தலைமையில் இடம் பெற்றது. இதன்போது நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான ரங்கன கொரலஹே, அனீசா பெர்னாண்டோ, சுப்புன் ஜயசேகர உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment