சுவாமி நடராஜானந்தா ஜீயின் 54வது சமாதி தினநிகழ்வு.



காரைதீவு நிருபர் சகா-
காரைதீவுமண்பெற்றெடுத்த மற்றுமொரு இ.கி.மிசன் துறவி சேவையின் சின்னம் சுவாமி நடராஜானந்தா ஜீயின் 54வது சமாதிதினநிகழ்வு (18)வியாழக்கிழமை அவர்பிறந்த காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது.

காரைதீவு பிரதானவீதியில் அமைந்துள்ள சுவாமியின் திருவுருச்சிலை முன்றலில் இந்நிகழ்வு இந்துசமயவிருத்திச்சங்கத்தலைவர் எஸ்.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக சுவாமிக்கு மலர்மாலை அணிவித்து புஸ்பாஞ்சலி செலுத்தி பஞ்சாராத்தி காட்டப்பட்டது.
அதிதிகளாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் பிரதேசசெயலக உதவிபிரதேசசெயலாளர் கே.பார்த்தீ பன் உள்ளிட்டோர் கலந்துசிறப்பித்தனர்.
சுவாமி நடராஜானந்தா நூற்றாண்டுவிழாக்குழுச் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா சுவாமி தொடர்பாக சிறப்புரையாற்றினார்.
சங்கச்செயலாளர் கு.ஜெயராஜி பஞ்சராத்திகாட்டி மகிழ்வுரை நிகழ்த்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :