ஏறாவூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் 50 ஆண்டு நிறைவு பொன் விழா - 2021




ஏறாவூர் சாதிக் அகமட்-

 ஏறாவூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொன் விழா நிகழ்வும், ஊழியர்களுக்கான மிகை ஊதியம் வழங்கும் நிகழ்வும் இன்று புதன் கிழமை சங்க தலைவர் MLA.லத்திப் அவர்களின் தலைமையில் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இன்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், சங்கங்களின் பதிவாளருமான ALM. அஸ்மி (SLAS) மற்றும் அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரான V.தங்கவேல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவர்களுடன் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சங்க இயக்குணர் சபை உறுப்பினர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், சங்கங்களின் பதிவாளருமான ALM. அஸ்மி ஊடங்களுக்கு கறுத்து தெரிவிக்கையில்:

 அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் செழிப்பு மிகு நாட்டை கட்டி எழுப்பும் செயற்திட்டத்தின் 10 கொள்கைப் பிரகடனத்தில் நாங்கள் கூட்டுறவாளர்கள் என்ற அடிப்படையில் இரு விடயத்தை கவனத்திலெடுத்துருக்கின்றோம். முதற்கட்டமாக ஊழல் அற்ற நாட்டை கட்டி எழுப்புதல், மோசடியற்ற நாட்டை கட்டியெழுப்புதல் என்றவாறு உரையாற்றினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :