இரு அமர்வுகளாக இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வில், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். இந்நிகழ்வின் சிறப்பு அதிதியாகவும் முதன்மைப் பேச்சாளராகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதியுமான ஜனாப் ஏ.எல். அப்துல் அஸீஸ் பங்குபற்றவிருப்பதுடன் ”பெண்களை வலுவூட்டுதல் – பூகோளப் பார்வையும் தேசிய மேம்பாடும்” என்ற தலைப்பில் கருத்துரையும் வழங்கவுள்ளார்.
இந்நிகழ்வின் இரண்டாவது அமர்வாக ”பெண்களை வலுவூட்டுதல் – கருத்தாடலுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியினை மனதில் கொள்ளுதல்” எனும் கருப்பொருளிலான சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெறவிருக்கின்றது. இந்நிகழ்வின் சிறப்பு அதிதி ஜனாப் ஏ.எல். அப்துல் அஸீஸ் அவர்களது தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கலந்துரையாடலில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் (பீடாதிபதி – அறபு மொழி, இஸ்லாமிய கற்கைகள் பீடம்), கலாநிதி எம்.ஐ. சபீனா (முன்னாள் பீடாதிபதி - பிரயோக விஞ்ஞானங்கள் பீடம்), கலாநிதி எம்.எம். பாஸில் (தலைவர் – அரசியல் விஞ்ஞானத் துறை), கலாநிதி எஸ். அனூசியா (தலைவர் – சமூக விஞ்ஞானங்கள் துறை) ஆகியோருடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜனாப் எம்.சீ.எம். நவாஸ் பங்கேற்கவுள்ளார்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக சமூகத்துடன் அம்பாரை மாவட்ட பிரதேச செயலக, கல்விக் காரியாலய, பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களும் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளும் மகளிர் சங்கங்களினது உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஊடகப் பிரிவு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
0 comments :
Post a Comment